குப்பைகளை ஓவியமாக மாற்றிய கைவினைக் கலைஞர்கள்
வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான கைவினை கலைஞர்கள் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை ஓவியமாக மாற்றி அசத்தினர்.
உரியங்காடோ((Uriangato)) என்ற இடத்தில் சோகலோ சதுக்கத்தில் சுமார் 9 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் பிளாஸ்டிக் குப்பைகள், சோள இலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு பிரம்மாண்ட ஓவியம் வடிவமைக்கப்பட்டது.
அன்பு, அமைதி, ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 'ஜிகோ' என்ற நாயின் உருவம், குப்பைகளை கொண்டு வண்ணமயமாக காட்சிபடுத்தப்பட்டது.
Comments