பெண் எஸ்.ஐ.யை சுட்டு கொன்றுவிட்டு ஆண் எஸ்.ஐ. தற்கொலை

0 1444

டெல்லியில் பெண் உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லி ரோஹினி காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளரான ப்ரீத்தி நேற்று இரவு பணி முடிந்து, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

அவரை இன்னொரு உதவி ஆய்வாளரான தீபான்சு கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஹரியாணா மாநிலம் கர்னால் அருகே காரில் தீபான்சு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய டெல்லி போலீஸார் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments