வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி

0 1291

கடலூர் மாவட்டம் வடலூரிலுள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெற்ற ஜோதி தரிசனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை எடுத்துரைக்கும் வகையில் வள்ளலார் ஏற்படுத்திய சத்தியஞானசபையில், தை மாதம் பூசநட்சத்திரத்தன்று 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.

அதன்படி சத்திய ஞான சபையில் இன்று காலை 6 மணிக்கும், பின்னர் காலை 10 மணிக்கும் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.இதைத் தொடர்ந்து, இன்று மேலும் 3 முறையும், நாளை காலை ஒருமுறையும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக வடலூருக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments