பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு
சென்னையிலுள்ள பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்திலும், ஏஜிஎஸ் திரையரங்கு அலுவலகத்திலும் 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவடைந்தது
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்திலும், சென்னையிலுள்ள ஏஜிஎஸ் திரையரங்கு, அலுவலகங்கள், கல்பாத்தி அகோரம் வீடு ஆகியவற்றிலும் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் மதுரையில் உள்ள அன்புப்செழியன் நண்பரும், நகைக்கடை அதிபருமான சரவணனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத 77 கோடி ரூபாய் மறைவிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மத்திய நேரடிகள் வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை தியாகராயநகர் ராகவய்யா தெருவிலுள்ள பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர்.
இதேபோல் தியாகராயநகர் சாரங்கபாணி தெருவிலுள்ள ஏஜிஎஸ் குழும திரையரங்கு அலுவலகத்திலும் 3ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Comments