வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் கேரளாவில் கைது

0 1058

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொலை தொடர்பாக, தலைமறைவாக இருந்த ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி 8-ம் தேதி களியக்காவிளை பகுதியில் பணியில் இருந்த வில்சன் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு கொண்டதாக, சையது அலி என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் செல்போன் சிக்னலை கொண்டு போலீசார் நடத்திய தேடுதலில், அவன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கேரள போலீசாரின் உதவியுடன், சையது அலியை தமிழக போலீசார் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அவரை கன்னியாகுமரிக்கு கொண்டு வந்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments