உலோக கழிவில் உருவாக்கப்பட்ட விலங்குகளின் சிலைகள்.. சிற்ப கலைஞர் அசத்தல்

0 1490

கென்யாவில் வீணான உலோகங்களை கொண்டு பல்வேறு பிரமாண்ட சிலைகளை உருவாக்கி சிற்பி ஒருவர் ஆச்சர்யம் அளித்துள்ளார்.

கென்ய உலோக சிற்பியான கியோகோ மெட்டிகியின் கலைக்கூட அலுவலகத்திற்கு செல்வோரை வாசலில் வரவேகின்றன உலோகத்தினால் செய்யப்பட்ட இரு பெரிய சிங்க சிலைகள் . பார்ப்பதற்கு நிஜ சிங்கங்களின் அளவை போல பெரிதாக இருக்கிறது. அதே போல சிறுத்தை மற்றும் யானை உள்ளிட்ட விலங்குகளின் சிலைகளையும் பிரமாண்டமாக உருவாக்கி வைத்துள்ளார் சிற்பி மெட்டிகி.

உலோக கழிவு:

இதே போல இன்னும் பல வனவிலங்குகளின் சிலைகளை அவற்றின் நிஜ உருவ அளவிலேயே வடிவமைத்துள்ளார் சிற்பி மெட்டிகி. இவை அனைத்தையுமே வீணான உலோகங்களை கொண்டு செய்துள்ளார்.

image

தற்செயல்:

கென்யாவில் புகழ்பெற்றது சிற்பி மெட்டிகியின் Art Gallery. இவரது தனித்துவமான உலோக சிற்பங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இவர் சிற்ப கலைஞர் ஆனது தற்செயலான ஒரு விபத்து. ஏனென்றால் மாணவ பருவத்தில் அரசாங்கத்திற்கு எதிராக போராடியதால், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவரது சகோதரியால் வெல்டிங் கடை ஒன்றில் வேலைக்கு சேர்த்து விடப்பட்டார்.

தனித்திறமை:

வேலை பார்த்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில், உலோகத்திலிருந்து ஒரு சில கலைப்பொருட்களை அவர் வடிவமைத்தார். அவற்றை ஒரு தரகர் மலிவாக வாங்கி விற்பனை செய்துள்ளார். தொடர்ந்து ஆர்டர்கள் வந்ததால் தன் திறமை மீது மேலும் நம்பிக்கை கொண்டு முழு வீச்சில் சிற்ப தொழிலில் ஈடுபட்டார். தற்போது சிறந்த கலைஞராக திகழ்கிறார்.

image

டிராலி சக்கரங்கள் முதல்..

வன விலங்குகளை வடிவமைத்துள்ளது குறித்து கூறியுள்ள 56 வயதான சிற்பி மெட்டிகி, ஆயிரக்கணக்கான டன் நிராகரிக்கப்பட்ட உலோகங்கள், சூப்பர் மார்க்கெட் டிராலி சக்கரங்கள் முதல் தொழிற்சாலைகளில் இருந்து துண்டாக்கப்பட்ட மெட்டல் வரை தனது கலை சிற்பங்களுக்கு பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். முழுக்க முழுக்க உலோக கழிவுகளை கொண்டு வனவிலங்குகளின் சிற்பங்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதற்காக

காட்டில் வாழும் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே, வீணான உலோக கழிவுகளை கொண்டு வனவிலங்குகளின் சிலைகளை வடிவமைத்துள்ளேன். தவிர மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது முக்கியமான கடமை என்றும் கூறியுள்ளார் இந்த சிற்பி.

image

மறுசுழற்சி செய்வது மிக முக்கியமான பிரச்சினையாகிவிட்டது. தனது இந்த முயற்சி உலகளாவிய கவலைகளாக இருக்க கூடிய அதிக நுகர்வு, மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவை நிலவும் இந்த காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது கூறியுள்ளார் கியோகோ மெட்டிகி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments