பெருவின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை
பெரு நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.
அந்நாட்டின் மத்திய, வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக எல் ரெமான்சோ கடற்கரைப் பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், சில இடங்களில் பாலங்களும், சாலைகளும் சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மீட்புப் பணியில் ராணுவத்தைக் களமிறக்க பெரு அரசு முடிவு செய்துள்ளது.
Comments