நடிகர் விஜயைக் காண திரண்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

0 1659

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்குள் நடிகர் விஜயை பார்ப்பதற்காக  நுழைய முயன்ற அவரது ரசிகர்கள் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தி விரட்டினர். 

அங்கு மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 5ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறையினர் விசாரணைக்காக நடிகர் விஜயை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

பல மணி நேர விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், காலை நெய்வேலி என்எல்சி நிறுவன வளாகத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

மாலையில் படப்பிடிப்பு முடிந்த பிறகு நுழைவு வாயிலில் காத்திருந்த ரசிகர்களை நோக்கி விஜய் கையை அசைத்தார். உற்சாகம் அடைந்த ரசிகர்கள் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தி விரட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments