ஆயிரக்கணக்கான ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம்
உலக நாடுகளை கொரானோ வைரஸ் மிரட்டி வரும் நிலையில், தென்கொரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆயிரக்கணக்கான ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்துக் கொண்டனர்.
கேபியோங் (Gapyeong) பகுதியில் உள்ள தேவாலயத்தில் வெகுவிமசர்சையாக இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது. 64 நாடுகளை சேர்ந்த ஆறாயிரம் ஜோடிகள் உட்பட 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது சிலர் முகமூடி அணிந்தபடி தங்களின் இணைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.
திருமண நிகழ்விற்காக தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களுக்கு கையுறை, முகமூடி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. தேவாலயத்தை நிறுவிய சன் மயூங் மூன்னின்(Sun Myung Moon) 100 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த பிரமாண்ட திருமண நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Comments