கொரோனா குறித்து முதன்முதலாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் பலியானது தொடர்பாக விசாரணை
கொரோனா வைரஸ் குறித்து முதன்முதலாக எச்சரித்த மருத்துவர் கொரானாவுக்கே பலியான நிலையில், அது குறித்து சீன அரசு விசாரணையை துவங்கியுள்ளது.
கொரானா பாதிப்பின் மையமாக கருதப்படும் ஊகான் நகரில் மருத்துவர் லீவென்லியாங் உயிரிழந்த ஊகான் மத்திய மருத்துவமனைக்கு சிறப்பு விசாரணை குழு அனுப்பப்பட உள்ளது.
கொரானா வைரசால் சீனாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது.
சீனா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் கொரானா பரவியுள்ளது. முன்னதாக கொரானா குறித்து முதன்முதலில் எச்சரித்த லீவென்லியாங் உள்ளிட்ட 8 மருத்துவர்களை அந்நாட்டு காவல்துறை தண்டித்தது.
இந்நடவடிக்கை குறித்து சீன உச்சநீதிமன்றமும் விமர்சித்தது. இந்நிலையில் லீ வென்லியாங்கின் மரணம் சீன மக்களிடையே கோபத்தை தூண்டிவிட்டுள்ளது.
Comments