குரூப் 4 பணிகளுக்கு கூடுதல் காலியிடங்கள்..!

0 812

குரூப் 4 பணிகளுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிபணியிடங்களில் கூடுதலாக 484 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் அறிவித்துள்ளது.

2019- 20 ஆண்டுக்கான பல்வேறு குரூப் 4 பணிகளுக்காக 6491 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு அப்பணிகளுக்காக 2019 செப்டம்பர் 1ம் தேதி தேர்வு நடந்தது. இந்த நிலையில் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட 2907 கூடுதல் இடங்களை சேர்த்து மொத்தம் 9398 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் 484 இடங்களைச் சேர்த்து மொத்தம் 9882 காலிபணியிடங்களாக அறிவித்துள்ளது. 

காலியிடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments