பிரிட்டன் நாடாளுமன்ற அலுவலகத்தில் புகுந்த நரி

0 1030

நாங்கள் பனங்காட்டு நரிகள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்பது அரசியல்வாதிகள் அடிக்கடி விடுக்கும் வாய்ச்சவடால்.

இந்த நரிகள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கும் விதத்தில் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் ஒரு ஒரிஜினல் நரி நுழைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்று உள்ளது.

லண்டனில் உள்ள நாடாளுமன்ற அலுவலகமான போர்ட்கல்லிஸ் ஹவுஸ் கட்டிடத்திற்குள் நேற்று மாலை நுழைந்த நரி, சர்வசாதாரணமாக எஸ்கலேட்டரில் ஏறி நான்காவது மாடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தில்  நுழைந்தது. நரியைக் கண்ட போலீசார் அதைப் பிடிக்க முயன்றனர்.

சற்று ஓட்டம் காட்டிய நரி பின்னர் பிடிபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.  கடந்த 2017ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் எத்தனையோ விசித்திர சம்பவங்களை கண்டுள்ளோம். ஆனால் இதுதான் டாப் என ஆளும் கட்சி எம்.பி.யான ஜுலியா லோபஸ்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments