இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு
இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
கொரானா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்ததாக வந்த தகவலும் பங்குச் சந்தை உயர்வுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக 41,357 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் வர்த்தக நேர இறுதியில் 429 புள்ளிகள் உயர்வுடன் 41,323 புள்ளிகளில் நிலைகொண்டது. அதே போன்று நிஃப்டி 133 புள்ளிகள் உயர்வுடன் 12,126 புள்ளிகளில் நிறைவுற்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து, 71 ரூபாய் 55 காசுகளாக இருந்தது.
Comments