நடிகர் கமலின் இந்தியன் - 2 படம் 2021 பொங்கலுக்கு வெளியாவதில் தாமதம்?

0 1224

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நடிகர் கமலின் இந்தியன் - 2 திரைப்படம், 2021ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசியலில் குதித்துள்ள கமல் நடிக்கும் கடைசி படம் எனக் கூறப்பட்டதால், அவரது ரசிகர்கள் பொங்கலுக்கு படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் படம் 2021ம் ஆண்டு கோடை விடுமுறையின் போது வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் சங்கரை போலவே பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்போன ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துடன் மோதுவதை தவிர்ப்பதற்காக, இந்தியன் - 2 படத்தை தாமதமாக வெளியிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெளியானால், அது கமலின் அரசியலுக்கு பலம் சேர்க்கும் என்றும் ஒருதரப்பினர் பேசி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments