தாய்மார்களை போலவே தந்தையருக்கும் 7 மாதகாலம் மகப்பேறு விடுமுறை வழங்க அரசு முடிவு

0 1522

தாய்மார்களை போலவே தந்தையருக்கும் 7 மாதகாலம் ஊதியத்துடன் கூடிய பேறு கால விடுமுறை வழங்க பின்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

தந்தையர்களும் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையிலும் இந்த திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே அந்நாட்டில் 2 மாதம் 14 நாட்கள் வரை தந்தையருக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பேறு கால விடுப்பை 7 மாதங்களாக நீட்டிக்கும் புதிய முறை செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி தாய் - தந்தை ஆகிய இருவருக்கும் ஒருங்கிணைந்த பேறு கால விடுமுறை 14 மாதங்களாக உயர்த்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments