பழங்குடியின மாணவரிடம் நேரில் வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
காலணியை கழற்றகூறிய விவகாரத்தில் பழங்குடியின மாணவர், அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்.
முதுமலை தெப்பக்காட்டுக்கு வந்த அமைச்சர், பழங்குடியின மாணவரை அழைத்து தனது காலணியை கழற்ற வைத்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதால், செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது அவர் வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும் மசினகுடி காவல்நிலையத்தில் மாணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், உதகையிலுள்ள தமிழக இல்லத்தில் மாணவர் உள்ளிட்டோரை அழைத்து நேரில் வருத்தம் தெரிவித்த அமைச்சர், அவர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து புகாரை இன்று மாலைக்குள் வாபஸ் பெற மாணவர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
Comments