குப்பைக்கும் வரி விதிக்க திட்டம்..!
மும்பை மாநகராட்சி குப்பைக்கும் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் நிதித் தலைநகரமும் பணக்கார மாநகராட்சியுமான மும்பையின் பட்ஜெட், பல மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகம்.
இந்நிலையில், மும்பை மாநகராட்சியின் வருவாய் 23 ஆயிரத்து 850 கோடி என்ற இலக்கில் இருந்து 5 சதவீதம் குறைந்துள்ளது. ரியல் எஸ்டே துறையில் சுணக்கம் காரணமாக, முக்கிய வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், வரும் நிதியாண்டில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு 9 சதவீதம் அளவுக்கு செலவை அதிகரிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கேற்ப வருவாய் ஆதாரத்தை பெருக்க புதுமையான வழிமுறைகளை மும்பை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. குப்பை சேகரிப்புக்கு வரி விதித்தல், பிறப்புச் சான்றிதழ் விநியோகத்திற்கு மேல்வரி விதித்தல் உள்ளிட்ட திட்டங்கள் மும்பை மாநகராட்சியின் பரிசீலனையில் உள்ளன.
Comments