முழங்கை காயத்தால் அவதி.. IPL தொடரில் இருந்து விலகிய ஜோஃப்ரா ஆர்ச்சர்

0 968

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர், முழங்கையில் ஏற்பட்டுள்ள முறிவு காரணமாக இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆர்ச்சர், 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

பின்னர் அடுத்த போட்டிக்கான பயிற்சயில் ஈடுபட்ட போது எதிர்பாராவிதமாக ஆர்ச்சரின் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ஆர்ச்சர். இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாட , ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக இந்த முறையும் ஆர்ச்சர் தக்க வைக்கப்பட்டிருந்தார்.

2018ம் ஆண்டு ஐபில் தொடரில் முதல் முதலாக பங்கேற்ற ஆர்ச்சர், அந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2019-ம் ஆண்டு ஐபில் தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தனது துல்லியமான அசுர வேக பந்துவீச்சால் பல முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் வரவை, ராஜஸ்தான் அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் செய்யப்பட்ட ஸ்கேனில், ஆர்ச்சரின் வலது முழங்கையில் முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து சிறப்பு மருத்துவ குழுவின் உதவியுடன் முழங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்ள உள்ளார் ஜோஃப்ரா ஆர்ச்சர். முழங்கை காயத்திலிருந்து மீண்டு வர சில காலம் பிடிக்கும். அதற்கான ஓய்வும் சிகிச்சையும் அவருக்கு தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும், விரைவில் துவங்க உள்ள ஐபில் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து சீக்கிரம் குணமாகி மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஜோஃப்ரா ஆர்ச்சர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ராஜஸ்தான் ராயல்சின் நட்சத்திர வீரராக திகழும் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபில் தொடரில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments