TNPSC தட்டச்சு தேர்விலும் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு

0 1314

மதுரையில் TNPSC தட்டச்சு தேர்வில் ஆள்மாறாட்ட புகாரில் பயிற்சி நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ முறைகேட்டை தொடர்ந்து, மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தகுதி தேர்வில் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் தேர்வு கட்டுப்பாட்டு கூடுதல் இயக்குனர் அளித்த புகாரின் பேரில், தத்தனேரியில் உள்ள ஸ்ரீநாதன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் என்ற தட்டச்சு பயிற்சி நிறுவன உரிமையாளர் செல்லத்துரை மற்றும் ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் உள்ளிட்ட இருவர் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments