கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் சீன அதிபர் பேச்சு
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் சீன அதிபர் சீ சின்பிங் இன்று தொலைபேசியில் பேசினார்.
தொலைபேசியில் இன்று காலை டிரம்பை தொடர்பு கொண்ட அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைத்து வருவதாகவும், அந்த வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சீனாவுக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் தாக்கத்தை நிதானமாக அமெரிக்கா மதிப்பிட வேண்டும், நியாயமாகவும், பொறுப்புடனும் அமெரிக்கா கருத்து வெளியிட வேண்டும் எனவும் ஜின்பிங் அப்போது டிரம்பிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments