ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை...

0 1970

50,000 கோடி ரூபாய் முதலீட்டில் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது,  அமெரிக்காவில் ஹல்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் கொள்கை ரீதியாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேச ஹல்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவன தலைவர் புரனேந்து சாட்டர்ஜி சென்னை வந்தார்.

அவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைப்பது குறித்து  ஆலோசிக்கப்பட்டது.

அப்போது ஹல்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் ராபின் முகோபாத்யாய், அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments