40000 கி.மீ. நீளத்திற்கு சாலை கட்டமைப்புகள் புதிதாக ஏற்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 1151

நாட்டில் புதிதாக 40 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய சாலை கட்டமைப்புகளை உருவாக்கவும், 23 எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போவை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தபின் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். இந்திய ஆட்டோமொபைல் துறை பிஎஸ் 6 தரத்திற்கு அரசு விதித்த காலக்கெடுவிற்குள் மாறியதை அவர் பாராட்டினார்.

எதிர்கால போக்குவரத்தில் மின்சார வாகனங்கள் முக்கிய இடத்தை வகிக்கும் என்ற அவர், அவற்றை தயாரித்து ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments