CAA -விற்கு எதிராக செல்போனில் பேசிச் சென்ற கவிஞரை போலீசில் ஒப்படைத்த கால்டாக்சி ஓட்டுநர்
மும்பையில் உபர் கால் டாக்சியில் பயணித்த போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக செல்போனில் பேசிச் சென்ற கவிஞரை, கால்டாக்சி ஓட்டுநர் போலீசில் ஒப்படைத்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாபாதித்யா சர்க்கார் (Bappaditya Sarkar) என்ற கவிஞர், காலா கோடா திருவிழாவில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பை வந்துள்ளார்.
இந்நிலையில் தான் தங்கியிருக்கும் இடத்துக்கு கால் டாக்சியில் பயணித்த கவிஞர், மும்பை பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து நண்பருடன் செல்போனில் பேசி சென்றுள்ளார்.
இதனை கேட்ட கால்டாக்சி ஓட்டுநர், சாண்டாக்ரூஸ் காவல்நிலைய வாசலில் காரை நிறுத்தி விட்டு ஏடிஎம் சென்று வருவதாகக் கூறி காவலர்களை அழைத்து வந்து கவிஞரை ஒப்படைத்துள்ளார். ஓட்டுநரின் புகார் குறித்து போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
Comments