பைனான்சியர் அன்புச் செழியன் வீடு, அலுவலகத்தில் 3வது நாளாக விசாரணை...

0 2034

சென்னையிலுள்ள பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்திலும்,  ஏஜிஎஸ் திரையரங்கு அலுவலகத்திலும் தொடர்ந்து 3ஆவது நாளாக வருமான வரித்துறையினர் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்திலும், சென்னையிலுள்ள ஏஜிஎஸ் திரையரங்கு, அலுவலகங்கள், கல்பாத்தி அகோரம் வீடு ஆகியவற்றிலும் நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் மதுரையில் உள்ள அன்புப்செழியன் நண்பரும், நகைக்கடை அதிபருமான சரவணனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் நேற்றும், நேற்று முன்தினமும் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத 77 கோடி ரூபாய் மறைவிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மத்திய நேரடிகள் வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை தியாகராயநகர் ராகவய்யா தெருவிலுள்ள பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இன்றும் 3ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தியாகராயநகர் சாரங்கபாணி தெருவிலுள்ள ஏஜிஎஸ் குழும திரையரங்கு அலுவலகத்திலும் 3ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அன்புச்செழியன் அலுவலகத்திலும், வீட்டிலும் 3ஆவது நாளாக சோதனை நடந்த நிலையில், அலுவலகத்தில் நடத்திய சோதனையை மட்டும் மதியம் 2 மணியுடன் அதிகாரிகள் முடித்துக் கொண்டனர். இதையடுத்து அலுவலகத்தில் இருந்து எடுத்த ஆவணங்களை 3 பைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள்  எடுத்துச் சென்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments