ஐடி ரெய்டை கிண்டலடித்து, பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் கூறிய கருத்துகள் வைரல்
ஐடி ரெய்டை கிண்டலடித்து, பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் அஜித் கூறிய கருத்துகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பைனான்சியர் அன்புச்செழியன், பிகிலை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு கடந்த 2 நாட்களாக பரபரப்பு செய்தியாக இருந்தது.
இந்நிலையில், தனது வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் கிண்டலாகக் குறிப்பிட்டது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வருமான வரித் துறையினரின் உதவியால் வீட்டில் காணாமல்போன பொருட்கள் அனைத்தும் கிடைத்துவிட்டது என்றும், ஆனால் வரி ஏய்ப்பு ஏதும் கண்டறியப்படவில்லை என்று அஜித் அப்போது பேட்டியளித்திருந்தார்.
இதேபோல, வெற்றிபெற்ற மனிதர்கள் மீது வரிகளை விதிப்பதை விட, மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகளிடம் பறிமுதல் செய்தால் நாட்டின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என ஒருமுறை அஜீத் பேட்டியளித்திருந்ததையும் அவரது ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
Comments