ஜெகன்மோகன் அரசு தொழில்முதலீடுகளை விரட்டியடிக்கிறது - சந்திரபாபு நாயுடு
கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை தமிழகத்திற்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலால், ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டுள்ளது.
ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறனுடன் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூரில் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. உள்ளூர்காரர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு, தொழில்நிறுவனங்களுக்கு சலுகைகள் ரத்து போன்ற ஆந்திர அரசின் கொள்கைகளால் அதிருப்தி அடைந்து கியா மோட்டார் நிறுவனம், தொழிற்சாலையை தமிழகத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக தமிழக அரசுடன் கியா மோட்டார்ஸ் பேசி வருவதாகவும் சொல்லப்பட்டது.
இதை ஆந்திர அரசும், கியா மோட்டார்ஸ் நிறுவனமும் மறுத்துவிட்டன. இருப்பினும், தொழில்முதலீடுகளை விரட்டியடிக்கும் வேலையை, ஜெகன்மோகன் ரெட்டி அரசு செய்துகொண்டிருப்பதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி விமர்சித்துள்ளது.
Comments