மஹாதிர் முகமது பேச்சின் தொனி மாறியிருப்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் - அன்வர் இப்ராஹிம்
மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது பேச்சின் தொனி மாறியிருப்பதை இந்தியா கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
காஷ்மீர் மற்றும் குடியுரிமை சட்ட திருத்த விவகாரங்களில், இந்தியாவை கடுமையாக விமர்சித்து மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா கடும் கட்டுப்பாடுகளை விதித்தததால், 44 லட்சம் டன் ஆக இருந்த பாமாயில் இறக்குமதி 40 ஆயிரத்து 400 டன்னாக சரிந்தது.
பாமாயில் ஏற்றுமதியை பிரதானமாக நம்பியுள்ள மலேசியா, கடும் நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து மஹாதிர் முகமது இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து கூறும் போக்கை மாற்றிக் கொண்டார். அண்மையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசிய மஹாதிர் முகமது, கூட்டு செய்தியாளர் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் பற்றி மூச்சுவிடவில்லை.
Comments