மத்திய அரசிடமிருந்து ரூ.822 கோடி வர வேண்டியிருப்பதாக ஏர் இந்தியா தகவல்

0 805

குடியரசுத்தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்கு தனி விமானங்கள் அனுப்பியதற்காக, மத்திய அரசிடமிருந்து 822 கோடி ரூபாய் வரவேண்டியிருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், ஏர் இந்தியாவுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகை குறித்து ஓய்வுபெற்ற அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஏர் இந்தியா முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்கு தனி விமானங்கள் அனுப்பியதற்காக 822 கோடியும், அரசு அதிகாரிகள் கடனுக்கு டிக்கெட் பெற்ற வகையில் 526 கோடியும், மீட்புப்பணிகளுக்கு 9 கோடியே 67 லட்சமும், வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து வந்ததற்காக12 கோடியே 65 லட்சமும் வர வேண்டி இருப்பதாக கூறியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments