மருத்துவமனை ஊழியர் மீது கார் மோதி விபத்து

0 972

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் சாலையில் நடந்து சென்ற தனியார் மருத்துவமனை ஊழியர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொல்லங்கோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் அபிலாஷ், இளம்பாலமுக்கு பகுதியில் கடந்த 2ம் தேதி சாலையில் நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் மோதிவிட்டு வேகமாக சென்றுவிட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பாறசாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடம் வந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பரிசோதித்ததில், அபிலாஷ் மீது கார் மோதும் காட்சியை கண்டுபிடித்தனர். இதையடுத்து காரின் பதிவு எண் 6867 என்பதை கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments