குழந்தையை காப்பாற்ற 360 கி.மீட்டர் தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்த ஆம்புலன்ஸ்
பிறந்த 40 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு இருதய நோய்க்கான சிகிச்சையளிக்க விரைந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்டு மங்களூரில் இருந்து பெங்களூர் வரையிலான சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சைப்புல் அஸ்மான் என்ற அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க பெங்களூர் மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்து தயார் நிலையில் இருந்தது. இதையடுத்து 360 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு மணி 20 நிமிடங்களில் எந்த விதப் போக்குவரத்து இடையூறும் இல்லாமல், குழந்தையை சுமந்தவாறு, வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் செல்வது வழிவகை ஏற்படுத்தப்பட்டது.
குழந்தையை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் ஊதியம் வேண்டாம் என மனிதாபிமானத்துடன் மறுத்துவிட்டார். குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதால் அதனை கட்டுப்படுத்திய பின்னர் சிகிச்சையளிக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments