உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீது பாய்ந்த பொது பாதுகாப்புச் சட்டம்
காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.
காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இயல்பு நிலை திரும்பியதையடுத்து பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
ஆனால் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகிய மூன்று முன்னாள் முதலமைச்சர்களும் சில பிரிவினைவாத தலைவர்களும் இன்னும் வீட்டுக்காவலில் உள்ளனர்.
இந்நிலையில், ஃபரூக் அப்துல்லாவைத் தொடர்ந்து, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் இன்னும் 6 மாதங்களுக்கு இவர்கள் எந்த வித விசாரணையுமின்றி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள்.
Comments