2019ஆம் ஆண்டில் Apple Watch விற்பனையில் புதிய சாதனை
ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3 கோடி கைக்கடிகாரங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
ஸ்வாட்ச் மற்றும் டிசாட் உள்ளிட்ட சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனங்களின் கடந்த ஆண்டு ஒட்டுமொத்த கடிகாரங்களின் விற்பனை எண்ணிக்கையைவிட ஆப்பிள் நிறுவனம் கூடுதலாக ஒரு கோடி விற்பனை செய்துள்ளது.
இளைஞர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய புதிய தொழில்நுட்ப வசதிகளை தனது நிறுவன கடிகாரங்களில் புகுத்தியதே ஆப்பிளின் இந்த அசுரத்தனமான வரவேற்புக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. 2018ஆம் ஆண்டைவிட 2019இல் ஆப்பிள் கைக்கடிகார விற்பனை 36 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
Comments