கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை குறைவு
அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை விகிதம் , கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆண்டு குறைந்துள்ளதாக, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா மற்றும் வேறு சில நாடுகளுடன் ஏற்பட்ட வர்த்தக தகராறு காரணமாக அமெரிக்காவின் இறக்குமதியும் ஏற்றுமதியும் குறைந்ததே இதற்கு காரணம் என்று அந்தச் செய்தி கூறுகிறது. அமெரிக்காவின் இறக்குமதி கடந்த ஆண்டு பூஜயம் புள்ளி 4 சதவிகிதமும், ஏற்றுமதி பூஜ்யம் புள்ளி ஒரு சதவிகிதமும் குறைந்ததாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை ஒன்று புள்ளி 7 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் மதிப்பு 616 புள்ளி 8 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளி நாடுகளில் முதலிடம் வகித்த சீனா அதனை இழந்துள்ளது. மெக்சிகோ, கனடா ஆகியன முறையே முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்ததை அடுத்து சீனா 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Comments