இளைஞரை சரமாரியாக தாக்கிய காவலர்கள்

0 1195

சிலி நாட்டில் இளைஞரை போலீசார் சூழ்ந்து, கண்மூடித்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோர்டில்லெரா மாகாணத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது பிடிக்கப்பட்ட இளைஞரை, காவலர் ஒருவர் முகத்திலேயே எட்டி உதைத்தார்.

அதைதொடர்ந்து, வேனில் அங்கு வந்து இறங்கிய காவலர்கள் 5 பேரும், அந்த இளைஞனை அடித்து, உதைத்து சரமாரியாக தாக்கினர்.

அந்த தாக்குதலில் இளைஞருக்கு விலா எலும்புகள் உடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் இளைஞரை தாக்கிய 7 காவலர்களும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments