அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்வதாக சீனா அறிவிப்பு
சுமார் 5 லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது,
நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவிய நிலையில் அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரிகளை சீனா விதித்து வந்தது. இந்த நிலையில் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்து கடந்த மாதம் அது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
அதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 க்கும் அதிகமான அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை சீனா திரும்பப் பெற்றுள்ளது.
வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் இந்த வரிக் குறைப்பு அமல்படுத்தப்படும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. அதே தினம் சீன இறக்குமதி மீதான வரியை அமெரிக்கா பாதிக்குப் பாதியாக குறைக்க உள்ளது.
Comments