நட்புடன் பழகி வரும் சிறுத்தை மற்றும் லேப்ரேடர் ரக நாய்

0 1770

அமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் சிறுத்தையும், லேப்ரேடர் ரக நாயும் நட்புடன் பழகி வருவது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நியூஜெர்சியிலுள்ள டர்டில் பேக் ((Turtle Back Zoo)) உயிரியல் பூங்காவில், நந்தி என்ற சிறுத்தையும், பொவ்வி எனப் பெயரிடப்பட்டுள்ள லேப்ரேடர் ரெட்ரீவர் ரக நாயும் பிறந்தது முதல் ஒன்றாகவே வளர்ந்து வருகின்றன.

இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்ட சிறுத்தைகளை பழக்குவதற்கும், தைரியமூட்டுவதற்கும், கூடவே நாய் ஒன்றும் இருப்பது உதவிகரமாக இருக்கும் என்பதால் அவற்றை ஒன்றாக சேர்த்து பூங்கா ஊழியர்கள் வளர்த்து வந்துள்ளனர். நாளடைவில் நெருங்கிய நண்பர்களாகிப் போன பொவ்வியும், நந்தியும் ஒன்றுடன் ஒன்று கட்டிப்புரண்டும், பொம்மைகளை பகிர்ந்தும் விளையாடி வருகின்றன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments