11 மாத ஆண்குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலம் - தந்தையிடம் விசாரணை

0 963

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 11 மாத ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தது தொடர்பாக தந்தையிடம், விசாரணை நடைபெறுகிறது.

அமல்ராஜ் - சுஷ்மிதா தம்பதியின் 11 மாத ஆண் குழந்தை விகாஸ். நேற்று மாலை குழந்தையுடன் அமல்ராஜ் மட்டும் இருந்த நிலையில், வெளியில் சென்றிருந்த சுஷ்மிதா திரும்பி வந்தபோது, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக கிடந்துள்ளது.

போலீசார் விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு சுஷ்மிதா பிளஸ் டூ படித்தபோது அமல்ராஜ் காதலித்ததாகவும், 7 மாத கர்ப்பிணியான பின்பு திருமணம் செய்ததும் தெரியவந்தது.

மேலும் குழந்தை பிறந்த பின்பு மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தையை 7 மாதமாக அமல்ராஜ் பார்க்க வராததுடன், சேர்ந்து வாழ்ந்தபோதும் குழந்தையை வெறுத்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments