ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல்: பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ரத்து

0 2636

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

பிரியதர்ஷினியை எதிர்த்துப் போட்டியிட்ட தேவியின் மனுவில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முதலில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும், தான் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரம் கழித்து பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் முறைகேடுகளுக்கும் அரசியல் அழுத்தத்துக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பிரியதர்ஷினி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்க ஏற்கனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்தும், முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments