தனியாக வாழும் முதியோர்களுக்காக பராமரிப்பு இல்லம் - மத்திய அரசு திட்டம்
தனியாக வாழும் முதியோர்களுக்காக பராமரிப்பு இல்லம் அமைப்பது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரது திட்டமிட்டுள்ளது.
மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், அனைத்து மூத்த குடிமக்களையும் கவனிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஆனாலும் தனியாக வாழும் முதியோர்களை மேலும் சிறப்பாக கவனிக்க வகைசெய்யும் புதிய சட்டத்தை கொண்டுவரும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் படி தனியாக வாழும் முதியோருக்காக நூலகம், உணவு விடுதி போன்ற வசதிகளுடன் பகல்நேர பராமரிப்பு இல்லம் அமைக்கப்படும் என்றும், அதில் மாலை வரை பொழுதை கழிக்கலாம் என்றும் கூறினார். மேலும் அவர்களை தொண்டு நிறுவனங்கள் கவனித்துக் கொள்ளும் வகையில் புதிய திட்டம் கொண்டுவர இருப்பதாகவும் கூறினார்.
Comments