மத்திய அரசு துறைகளில் 6.83 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு பதில்
மத்திய அரசு துறைகளில் சுமார் ஆறே முக்கால் லட்சம் (6¾ ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று பதில் அளித்துள்ளார்.
அதில் அவர், மத்திய அரசு துறைகளில் 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 பணியிடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி, அவற்றில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 பணியிடங்கள் காலியாக இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜினாமா, மரணம், பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் காலி இடங்கள் உருவாகின்றன என்றும், இந்த காலியிடங்களை சம்பந்தப்பட்ட துறைகள் நிரப்பும் என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Comments