GOOGLE, YOUTUBE வருவாயை முந்திய இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் நிறுவனம் 2019ம் ஆண்டில் விளம்பரங்கள் வாயிலாக இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் ($20 billion) வருவாய் ஈட்டியுள்ளது.
புகைப்படத்தை பகிரும் அந்த செயலியை 2012ம் ஆண்டில் சுமார் 5,093 கோடி ரூபாய்க்கு (715 மில்லியன் dollars) பேஸ்புக் வாங்கியது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் சுமார் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.
பேஸ்புக் 2019ம் ஆண்டில் இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாயை (70 பில்லியன் டாலர் ) வருவாயாக ஈட்டியுள்ளது. அதில் கால் பகுதிக்கும் அதிகமாக இன்ஸ்டாகிராம் வருவாய் ஈட்டியுள்ளது என்றும், இதேபோல் கூகுளின் யூ டியூப் செயலியை விடவும் இன்ஸ்டாகிராம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments