பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கச் சென்று மீண்டும் பனியில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு
துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கச் சென்று மீண்டும் பனியில் சிக்கி 33 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வேன் மாகாணத்தின் பாசெசேஹிர் நகரில் செவ்வாய்க்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. மலைப் பாதையில் ஏற்பட்ட அந்தப் பனிச் சரிவில் 2 பேர் சிக்கினர். அவர்களை மீட்பதற்காக 300 பேர் அடங்கிய மீட்புக் குழு வரவழைக்கப்பட்டது. அவர்கள், பனிச்சரிவில் மாயமானவர்களைத் தேடும் பணியில் 2-ஆவது நாளாக நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது மீண்டும் பெரிய அளவிலான பனிச்சரிவு ஏற்பட்டதில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கினர்.
இந்த விபத்தில் சிக்கிய 8 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் மாயமான 25 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பிட்ட நேரம் முடிவடைந்துள்ளதால் மாயமான 25 பேரும் உயிரிழந்திருக்கலாம் என துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments