கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தேனி எம்பி கோரிக்கை

0 1078

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுழிய நேரத்தின் போது பேசிய அவர், கீழடியில் மத்திய தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் தமிழர்களின் நாகரீகத் தொன்மையை உலகிற்கு பறைசாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே 5 தொல்லியல் இடங்களில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பில் கீழடி இடம் பெறவில்லை என்று கூறிய ரவீந்திரநாத், கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கும், அடுத்த கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்குவதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments