காஷ்மீர் பற்றிய பேச்சுவார்த்தையை தவிர்த்த மலேசிய பிரதமர்
காஷ்மீர் மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து எந்த ஒரு நாடும் கருத்து வெளியிடக் கூடாது என வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் காஷ்மீர் தொடர்பாக வெளிநாடுகளின் கருத்துகள் குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் இறையாண்மையை பிற நாடுகள் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் மலேசியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு பிரதமர் மஹாதீர் முகமதுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து இருதலைவர்களும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிக்கையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் பிரச்சினை குறித்து மலேசிய பிரதமருடன் பேச்சு நடத்தியதாக குறிப்பிட்டார்.
ஆனால் மலேசிய பிரதமர் காஷ்மீரை பற்றிய பேச்சுவார்த்தை பற்றி குறிப்பிடுவதை தவிர்த்துவிட்டார். அதுமட்டுமின்றி காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் உடன்படுவதாக எந்த இடத்திலும் மலேசியா குறிப்பிடவில்லை.
Comments