தீயணைப்புத்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 கோடி இழப்பு
தமிழக தீயணைப்புத் துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில், அரசுக்கு 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருவரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீயணைப்புத் துறை இயக்குனர்களாக இருந்த ஹரிஹரனே, வீரராகவன் ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த 17 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு கற்பனையானது என்பதை அரசுத்தரப்பு சாட்சிகளே நிரூபித்திருப்பதாகக் கூறி இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
Comments