துருக்கியில் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் மூன்றாக உடைந்து விபத்து...

0 2125

துருக்கியில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானதில் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 179 பேர் படுகாயமடைந்தனர்.

இஸ்தான்புல் நகரில் உள்ள விமானநிலையத்திற்கு வந்த பெகசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் 177 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்தனர். விமான நிலையத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஈரப்பதத்துடன் இருந்த ஓடுதளத்தில் தரையிறங்கிய விமானம் வழுக்கிக் கொண்டு விழுந்தது.

இந்த விபத்தில் விமானம் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 179 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக துருக்கி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments