கொரனா படையெடுப்புக்கு சீன அரசு தான் காரணம்..! அரசு மருத்துவர் பரபரப்பு குற்றச்சாட்டு
கொரனா படையெடுப்புக்கு சீன அரசு தான் காரணம் என சீனாவை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். டிசம்பர் மாதம் தொடக்கத்தில் கொரனாவை கண்டறிந்த மருத்துவரை இது குறித்து பேச கூடாது என சீன அரசு மிரட்டியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீனாவின் வூகான் நகரை சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் (Li Wenliang), வூகான் மத்திய மருத்துவமனையில் இதய மருத்துவராக பணியாற்றி வருகிறார். டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அந்த மருத்துவமனையில் காய்ச்சலால் 10 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் குடும்ப வகையை சேர்ந்த வைரஸ் என்பதை கண்டறிந்து அதிர்ந்துள்ளார். இதனை தனது மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவிலும் பகிர்ந்துள்ளார்.
லி வென்லியாங் ரிப்போர்ட்டினை பார்த்த சீன மருத்துவர்கள் சார்ஸ் வைரஸ் வகையை இது ஒத்திருக்கிறது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சீன அதிகாரிகள் லி வென்லியாங்கை மிரட்டி, இது குறித்து வெளியே பேச கூடாது எனவும் சமூக வலைதளங்களில் இதனை பகிர கூடாது என்றும் மிரட்டி இது தொடர்பாக ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.
லி வென்லியாங் கொரனா வைரஸ் பற்றி எதுவும் பேசாத நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கொரனா தாக்கபட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அதன்பின் தனக்கும் கொரனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தார்.
கொரனா வேகமாக பரவி வரும் நிலையில் லி வென்லியாங் படுத்த படுக்கையில் இருந்தே இந்த வைரஸ் குறித்து முன்பே கண்டறிந்ததாகவும் இதனை சொல்ல முயற்சித்த போது அதிகாரிகள் இது குறித்து பேச கூடாது என்று மிரட்டி ஒப்பந்தம் போட்டுள்ளனர். மேலும் சீன மக்களே பாதுகாப்பாக இருங்கள் எனவும் சீன அரசு மக்களிடம் எதையோ மறைக்கிறது என்று வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து கொரனா வைரஸ் பரவி வருவதை ஒப்புக்கொண்ட சீன அரசு லி வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டு கொண்டது.
Comments