சிவில் நீதிபதி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் எப்போது பதிவேற்றம் செய்ய வேண்டும் - TNPSC அறிவிப்பு

0 750

சிவில் நீதிபதி பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை பிப்ரவரி 7 முதல் 14-ம் தேதிக்குள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

176 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அப்பணிக்கு 8, 691 பேர் விண்ணப்பித்த நிலையில் முதல்நிலை தேர்வு கடந்த நவம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள, முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்கள் தங்களது சான்றிதழ்களை, இ - சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments