நித்யானந்தா ஜாமின் ரத்து..! கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு
தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்யானந்தாவின் ஜாமினை ரத்து செய்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் பெங்களூரு ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டு நித்யானந்தாவுக்கு ஜாமின் வழங்கியது. ஆனால் 2018 க்குப் பிறகு அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், ஜாமின் விதிகளை மீறிய நித்தியானந்தாவின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தாக்கல் செய்த மனுவில் உயர் நீதிமன்ற நீதிபதி குன்கா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு நித்யானந்தா இந்தியாவை விட்டு ஓடி விட்டதாக லெனின் கூறியதையும் கருத்தில் கொண்டு ஜாமினை ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
Comments