வருமான வரி விவகாரம் - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் !
கடந்த 2002முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் தமக்கு தொழில்ரீதியாக சுமார் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் செலவானதாக நடிகர் ரஜினிகாந்த் வருமானவரி தாக்கல் செய்தார்.
ஆனால் குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அவர் திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்பதால், அதன் உண்மைத் தன்மை குறித்து வருமான வரி அதிகாரிகள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அதில், தனிநபர் மற்றும் வீட்டுச் செலவினங்களை அவர் தொழில் செலவினங்கள் என்று தவறாக குறிப்பிட்டதை கண்டுபிடித்தனர்.
ரஜினி மீதான குற்றச்சாட்டில் அவருக்கு அதிகபட்ச அபராதமாக ஒரு கோடியே 98 லட்சம் அல்லது குறைந்தபட்ச அபராதமான 66 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் விதிக்க வழிவகை உள்ளது. ஆனால் வருமானவரித்துறை சார்பில் அவருக்கு குறைந்தபட்சத் தொகையான 66 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால், தீர்ப்பாய உறுப்பினர்கள் ஒரு நடிகர் சினிமாவில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் தொழில் ரீதியாக தம்மை தயார் நிலையில் வைத்திருக்க செலவு செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று கூறி அபராதத்தை 2013 ல் ரத்து செய்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014 ல் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. ஆனால், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக அபராதம் விதிக்கப்பட்ட வழக்குகளை கைவிட்டு விடலாம் என்று மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் எடுத்த கொள்கை முடிவை அடுத்து ரஜினி மீதான வழக்கு சென்ற வாரம் வாபஸ் பெறப்பட்டு விட்டது.
Comments